உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / புத்தாண்டு நிகழ்ச்சிகளில் அடிப்படை வசதிகள் இன்றி திண்டாட்டம் சுற்றுலா பயணிகள் விரக்தி

புத்தாண்டு நிகழ்ச்சிகளில் அடிப்படை வசதிகள் இன்றி திண்டாட்டம் சுற்றுலா பயணிகள் விரக்தி

புதுச்சேரி : புதுச்சேரியில் பல்வேறு இடங்களில் நடந்த புத்தாண்டு நிகழ்ச்சியில் அடிப்படை வசதிகள் இல்லாததால் சுற்றுலா பயணிகள் பலர் ஏமாற்றமடைந்தனர். புதுச்சேரியில் புத்தாண்டை கொண்டாட அனுமதி வழங்குவதில் புச்சேரி அரசு தாராளம் காட்டிவருகிறது. இதனால் புதுச்சேரியில், ஓட்டல், ரிசார்ட்டுகள், தனியார் விடுதிகள் மற்றும் திறந்த வெளி அரங்குகளில் புத்தாண்டு நிகழ்ச்சி நடத்த அரசு அனுமதி வழங்கியது. இதனால், புதுச்சேரி தங்கும் விடுதிகள், ஓட்டல் அறைகள் உள்ளிட்ட இடங்களில் சுற்றுலா பயணிகள் முன்பதிவு செய்ததால் நிரம்பிய வழித்தன. இதில், ஓட்டல்களில் நடக்கும் புத்தாண்டு நிகழ்ச்சியில் முன்பதிவு செய்தவர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கின்றனர். கடற்கரை, திறந்த வெளியில் நடத்தும் நிகழ்ச்சியில் அளவுக்கு அதிகமானோரை அனுமதிக்கின்றனர்.கடந்த ஆண்டு புத்தாண்டு நிகழ்ச்சியை, நடத்தியவர்கள் அறிவித்தபடி, சரியான முறையில் மது, உணவுகள் வழங்கவில்லை என புகார்கள் எழுந்தன. இந்த ஆண்டு, பயணிகளிடமிருந்து புகார் வர கூடாது என உள்ளாட்சி துறை மூலம் புத்தாண்டு நடத்துபவர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டது. ஆனால், இந்தாண்டு பல்வேறு இடங்களில் 500 பேர் கூடும் இடங்களில் ஆயிரக்கணக்கானோர்களை அனுமதித்தனர். அந்த இடங்களில் சுற்றுலா பயணிகள் அமர்வதற்கு இடம், கழிப்பறை வசதிகள், குடிநீர் உள்ளிட்ட வசதிகள் செய்து தரவில்லை.கவர்ச்சியாக அறிவித்த மது வகைளை வழங்காமல் இரவு 10:00 மணிக்கு மேல் நேரம், செல்ல, செல்ல சிறிய பாட்டில்களில் உள்ள பீர் வகைகளை மட்டும் வழங்கினர். அதை வாங்குவதற்கு, முண்டி அடித்து கொண்டு வாங்கினர். மதுவை, விட உணவுகளை வாங்குவதில் நெட்டி, மோதி அவதியடைந்தனர்.சில இடங்களில் புத்தாண்டு நிகழ்ச்சி நடத்தியவர்களுக்கும், சுற்றுலா பயணிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. சிலர் புத்தாண்டு நிகழ்ச்சிக்காக வாங்கிய டோக்கனை குறைந்த விலைக்கு விற்று சென்றனர். கடந்த ஆண்டை போலவே, இந்த ஆண்டும் புத்தாண்டு நிகழ்ச்சியில் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் சென்றுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ