உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / புத்தாண்டில் படகு குழாமில் குவிந்த சுற்றுலா பயணிகள்

புத்தாண்டில் படகு குழாமில் குவிந்த சுற்றுலா பயணிகள்

அரியாங்குப்பம் : புத்தாண்டையொட்டி நோணாங்குப்பம் படகு குழாமில் அலைமோதிய கூட்டத்தில் சுற்றுலா பயணிகள் நீண்ட நேரம் காத்திருந்து படகு சவாரி செய்தனர்.புதுச்சேரியில் உள்ள சுற்றுலா தலங்களில் சுற்றுலா பயணிகளை மிகவும் கவர்ந்து வருவது நோணாங்குப்பம் படகு குழாம். ஒவ்வொரு வார விடுமுறை நாட்களான சனி, ஞாயிறு ஆகிய இரு நாட்களில் வெளியில் இருந்து சுற்றுலா பயணிகள் வருகின்றனர். தொடர் விடுமுறை மற்றும் புத்தாண்டையொட்டி, நோணாங்குப்பம் படகு குழாமில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். புத்தாண்டு கொண்டாட புதுச்சேரிக்கு வெளி மாநிலங்களில் இருந்து வந்தர்கள் நேற்று காலையிலேயே படகு குழாமிற்கு வந்தனர். ஒரே நேரத்தில் ஆயிரத்திற்கு மேற்பட்டவர்கள் படகு குழாமில் குவிந்ததால், போதிய படகுகள் இல்லாமல் வெகு நேரம் காத்திருந்தனர்.மாலை 6:00 மணிக்குள் படகு சவாரி முடிக்கப்பட்டதால், பலர் படகு சவாரி செய்ய முடியாமல் திரும்பி சென்றனர். காலையில் இருந்து மாலை வரை நோணாங்குப்பம் படகு குழாமில் வழக்கத்தை விட நேற்று புத்தாண்டு தினத்தில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ