மேலும் செய்திகள்
சுதந்திர தின ஒத்திகை போக்குவரத்து மாற்றம்
07-Aug-2025
புதுச்சேரி : உப்பனாறு குறுக்கு பாலம் இடிக்கும் பணி துவங்க உள்ளதால், காமராஜர் சாலையில் இன்று முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. போக்குவரத்து (வடக்கு-கிழக்கு) எஸ்.பி., ரச்சனாசிங் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: பொதுப்பணித்துறை சார்பில், காமராஜர் சாலை பாலாஜி தியேட்டர் அருகே உள்ள பழைய உப்பனாறு குறுக்கு பாலத்தை இடித்து, மறுகட்டமைப்பு பணி இன்று 4ம் தேதி தொடங்க உள்ளது. அதனையொட்டி, இன்று 4 ம் தேதி முதல் தற்காலிக போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது. காமராஜர் சாலையில் பெரியார் சதுக்கத்தில் இருந்து மேற்கில் இருந்து கிழக்கு நோக்கி செல்லும் நடுத்தர மற்றும் இருசக்கர வாகனங்கள் வழக்கமான பாதையை பின்பற்றி புதிய பாலம் வழியாக ராஜா தியேட்டர் நோக்கிச் செல்லலாம். கிழக்கில் இருந்து மேற்கு திசை நோக்கி செல்லும் இருசக்கர வாகனங்கள், புதிய பாலத்தில் அமைத்துள்ள தடுப்புகள் வழியாக பாலாஜி தியேட்டர் நோக்கி செல்லலாம். நடுத்தர மற்றும் கனரக வாகனங்கள் ஜி.ஆர்.டி., சந்திப்பில் வலப்புறம் திரும்பி வள்ளலார் சாலை, 45 அடி சாலை, சாரம் அவ்வை திடல் வழியாக காமராஜர் சாலையை அடைய வேண்டும். ராஜா தியேட்டரில் இருந்து ஜி.ஆர்.டி., சந்திப்பு நோக்கி காமராஜர் சாலையில் எந்த கனரக மற்றும் நடுத்தர வாகனங்கள் அனும திக்கப்படமாட்டாது. ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனங்கள் தவிர்த்து, அனைத்து கனரக மற்றும் நடுத்தர வாகனங்கள் அஜந்தா சந்திப்பு வழியாக அண்ணா சாலை மற்றும் காமராஜர் சாலையில் நுழைய அனுமதிக்கப்படாது. இவை எஸ்.வி., பட்டேல் சாலையில் அஜந்தா சந்திப்பு செஞ்சி சாலை - சோனம்பாளையம் - சுப்பையா சாலை -மறைமலை அடிகள் சாலை வழியாக நகரப் பகுதிகளை அடையலாம். காமராஜர் சாலையில் உப்பனாறு பாலப் பணிகள் முடியும்வரை இந்த போக்குவரத்து மாற்று ஏற்பாடுகளை கடைபிடித்து போக்குவரத்து போலீசாருடன் ஒத்துழைக்குமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
07-Aug-2025