உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / சாலைகளில் வாகன நெரிசல் பொதுமக்கள் கடும் அவதி

சாலைகளில் வாகன நெரிசல் பொதுமக்கள் கடும் அவதி

புதுச்சேரி: தீபாவளி பண்டிகையொட்டி, நகர பகுதியில் ஏற்பட்ட வாகன நெரிசலில் பொதுமக்கள் கடுமையாக அவதிப்பட்டனர். புதுச்சேரியில் நாளுக்கு நாள், போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருகிறது. கடலுார் ரோடு, முதலியார்பேட்டை ரயில்வே மேம்பாலம் பணி நடந்து வருவதால், அந்த வழி மூடப்பட்டது. அதனால், உப்பளம் மற்றும் மரப்பாலம் நுாறடி சாலையில், போக்குவரத்து நெரிசலில், பள்ளி, கல்லுாரி செல்லும் மாணவர்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, பொதுமக்கள், துணிகள் உள்ளிட்ட பொருட்கள் வாங்க, நகரப்பகுதிக்கு செல்கின்றனர். காமராஜர் சாலை, அண்ணா சாலை, காந்தி வீதி ஆகிய சாலைகளை கடந்து செல்வதற்குள் மக்கள் படாத பாடுபட்டு வருகின்றனர். ராஜிவ், இந்திரா சிக்னல்களில், வானங்கள் நீண்ட துாரம் அணிவகுத்து நின்றன. புதிய பஸ் நிலையத்தில் இருந்து, கடலுார், விழுப்புரம், சென்னை மார்க்கமாக செல்லும் பஸ்கள் ஒரே வழியில் சென்று, இந்திரா சிக்னல் சந்திப்பில் பிரிந்து செல்வதால், மறைமலை அடிகல் சாலையில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டதால் பொது மக்கள் கடும் அவதிப்பட்டனர். தீபாவளி பண்டிகையை, கொண்டாட, வெளியூருக்கு செல்லும் பொதுமக்கள், பஸ் கிடைக்காமல், நேற்று மாலை புதிய பஸ் ஸ்டாண்டில், வெகுநேரம் காத்திருந்து பயணம் செய்தனர். தீபாவளி பண்டிகை வரை, கூடுதல் போலீசாரை நியமித்து, போக்குரவத்தை சீர் செய்ய வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ