மேலும் செய்திகள்
ரோட்டரி தலைவர்களுக்கான 2 நாள் பயிற்சி முகாம்
01-Oct-2025
புதுச்சேரி: ஜிப்மரில் மேல் மூட்டு எலும்பு முறிவு சிகிச்சை குறித்த பயிற்சி பட்டறை நடந்தது. ஜிப்மர் எலும்பியல் துறை சார்பில், மேம்படுத்தப்பட்ட விபத்து சிகிச்சை குறித்து தொடர் கருத்தரங்களை நடத்தி டாக்டர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக அப்துல்கலாம் கலையரங்கில் மேல் மூட்டு எலும்பு முறிவு சிகிச்சை குறித்த பயிற்சி பட்டறை நடந்தது. தமிழகம், புதுச்சேரியை சேர்ந்த டாக்டர்கள் பங்கேற்று பயிற்சி பெற்றனர். எலும்பு அறுவை சிகிச்சையில் தற்போதுள்ள நவீன தொழில்நுட்பங்கள் குறித்து டாக்டர்கள் எழுப்பிய சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது. துறை தலைவர் சுரேஷ்காந்தி, டாக்டர்கள் பசுபதி, ஜெகதீஸ் மேனன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
01-Oct-2025