உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / இந்திரா நகர் தொகுதியில் மின்மாற்றி இயக்கி வைப்பு

இந்திரா நகர் தொகுதியில் மின்மாற்றி இயக்கி வைப்பு

புதுச்சேரி : இந்திராநகர் தொகுதியில் புதிய மின்மாற்றியை அரசு கொறடா ஆறுமுகம் இயக்கி துவக்கி வைத்தார். புதுச்சேரி இந்திரா நகர் தொகுதிக்குட்பட்ட ஐய்யங்குட்டிபாளையம் பகுதியில் மின்மாற்றி பழுதடைந்ததை அப்பகுதி மக்கள் தொகுதி எம்.எல்.ஏ., ஆறுமுகத்திடம் தெரிவித்தனர். இதையடுத்து அவர் உடனடியாக அப்பகுதிக்கு நேரில் சென்று ஆய்வு செய்தார். பின் அதிகாரிகளை அழைத்து உடனடியாக மின்மாற்றியை மாற்ற வலியுறுத்தினார். இதை யடுத்து ரூ.3 லட்சம் மதிப்பில் புதிய மின்மாற்றி மாற்றப்பட்டது. இதனை ஆறுமுகம் எம.எல்.ஏ., பொதுமக்கள் பயன்பாட்டிற்கு இயக்கி வைத்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை