உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  வாய்க்கால் அமைக்க மரம் வெட்டி அகற்றம்

 வாய்க்கால் அமைக்க மரம் வெட்டி அகற்றம்

பாகூர்: காட்டுக்குப்பம் பகுதியில் வாய்க்கால் அமைக்கும் பணிக்கு இடையூறாக இருந்த பழமையான மரம் வெட்டி அகற்றப்பட்டது. புதுச்சேரி பொதுப்பணித் துறை சார்பில், புதுச்சேரி - கடலுார் சாலை காட்டுக்குப்பம் முதல் கன்னியக்கோவில் வரை 3 கோடியே 37 லட்ச ரூபாய் செலவில், 'யு' வடிவ வடிகால் அமைக்கும் பணியை, கடந்த பிப்., மாதம் 3ம் தேதி முதல்வர் ரங்கசாமி துவக்கி வைத்தார். தொடர்ந்து, கான்கீரிட் சுவர் மூலமாக கழிவுநீர் வாய்க்கால் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. காட்டுக்குப்பம் அடுத்த வாய்க்கால் ஓடை சந்திப்பில் இருந்து பழமையான துாங்கு மூஞ்சு மரம் வாய்க்கால் அமைக்கும் பணிக்கு இடையூறாக இருந்ததால், அப்பகுதியில் பணி கிடப்பில் போடப்பட்டது. இந்நிலையில், அந்த மரம் நேற்று வெட்டி அகற்றப்பட்டது. அந்த பகுதியில் வாய்க்கால் அமைக்கும் பணியை உடனடியாக மேற்கொள்ள வேண்டும். அதேநேரம், வெட்டப்பட்ட மரத்திற்கு ஈடு செய்யும் வகையில், மரக்கன்றுகளை நட்டு பராமரிக்க பொதுப்பணித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை