மேலும் செய்திகள்
கராத்தே நிபுணர் பிறந்த நாள் விழா
2 hour(s) ago
தேசிய போட்டியில் பங்கேற்கும் வீராங்கனைக்கு நிதியுதவி
2 hour(s) ago
அரசு மருத்துவமனையில் பணி புறக்கணிப்பு போராட்டம்
2 hour(s) ago
வவுச்சர் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
2 hour(s) ago
வில்லியனுார்: புதுச்சேரி வனம் மற்றும் வனவிலங்குத் துறை, கோயமுத்துார் வன மரபியல் மற்றும் மரப்பெருக்கு நிறுவனம் ஆகியன சார்பில், வில்லியனுார், கோபால்சாமி நாயக்கர் திருமண நிலையத்தில் மரம் வளர்ப்போர் விழா நடந்தது.கோயமுத்துார் வன மரபியல் மற்றும் மரப்பெருக்கு நிறுவன இயக்குனர் குன்னிக்கண்ணன் தலைமை தாங்கினார். புதுச்சேரி வனம் மற்றும் வன விலங்கு துறை செயலாளர் ஜெயந்தகுமார் முன்னிலை வகித்தார். வேளாண் துறை இயக்குனர் வசந்தகுமார் வரவேற்றார். சிறப்பு விருந்தினர் அமைச்சர் தேனீ ஜெயக்குமார், கண்காட்சி அரங்கை திறந்து வைத்து, ஆவணப் படங்களை வெளியிட்டார்.தொடர்ந்து இந்தாண்டு புதுச்சேரி கடலோர பகுதிகளில் மரம் வளர்ப்பு என்ற திட்டம் துவங்கப்பட்டது. வனப்பாதுகாவலர் அருள்ராஜன் வாழ்த்துரை வழங்கினார். புதுச்சேரி, காரைக்கால், கடலுார், விழுப்புரம் பகுதியை சேர்ந்த 600க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்றனர்.
2 hour(s) ago
2 hour(s) ago
2 hour(s) ago
2 hour(s) ago