உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / தி.மு.க.,வினர் திருவள்ளுவர் உருவப்படத்திற்கு மரியாதை

தி.மு.க.,வினர் திருவள்ளுவர் உருவப்படத்திற்கு மரியாதை

புதுச்சேரி, : புதுச்சேரி மாநில தி.மு.க., சார்பில் நடந்த திருவள்ளுவர் தின விழாவில் அவரது உருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.புதுச்சேரி மாநில தி.மு.க ., சார்பில், தமிழ் புத்தாண்டு, பொங்கல் மற்றும் திருவள்ளுவர் தினம் ஆகிய முப்பெரும் விழா, ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் இந்த ஆண்டுக்கான முப்பெரும் விழா, நேற்று காலை லப்போர்த் வீதியில் உள்ள தலைமை அலுவலகத்தில் கொண்டாடப்பட்டது. விழாவில்,அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த திருவள்ளுவர் படத்திற்கு எதிர்க்கட்சித் தலைவர் சிவா மலர் துாவி மரியாதை செலுத்தினார். இதைத்தொடர்ந்து அவர் புதிய பேருந்து நிலைய முகப்பில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.மேலும், அவைத் தலைவர் சிவக்குமார், எம்.எல்.ஏ.,க்கள் அனிபால் கென்னடி, செந்தில்குமார், சம்பத் மற்றும் பல்வேறு தி.மு.க., நிர்வாகிகள் பங்கேற்று மரியாதை செலுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ