கஞ்சா விற்ற இருவர் கைது
புதுச்சேரி: கஞ்சா விற்ற இருவரை போலீசார் கைது செய்தனர். மங்கலம் உதவி சப் இன்ஸ்பெக்டர் பெரியசாமி மற்றும் போலீசார் ரோந்து சென்றனர். உறுவையாறு சுடுகாட்டு பகுதியில் இளைஞர்கள், சிறுவர்களுக்கு கஞ்சா விற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். அங்கிருந்த வாலிபர்கள் இருவர் போலீசாரை கண்டதும் தப்பியோட முயன்றனர். அவர்களை போலீசார் மடக்கி, விசாரித்தனர். அவர்கள் பெரம்பலுார் மாவட்டம், வாலிகண்டபுரம் பகுதியைச் சேர்ந்த ஹரிஹரன், 21; வில்லியனுார் ஆச்சாரியபுரம் பகுதியைச் சேர்ந்த நந்தகுமார், 20, என்பதும், சிறுவர்கள், இளைஞர்களுக்கு கஞ்சா விற்றதும் தெரியவந்தது. இருவர் மீதும் போலீசார் வழக்குப் பதிந்து கைது செய்தனர். அவர்களிடம் இருந்த 270 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.