உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பெண்ணுக்கு ஆபாச படம் அனுப்பிய இருவர் கைது

பெண்ணுக்கு ஆபாச படம் அனுப்பிய இருவர் கைது

புதுச்சேரி : இன்ஸ்டாகிராமில் இளம்பெண்ணுக்கு ஆபாச படம் அனுப்பிய இரு வாலிபர்களை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.புதுச்சேரியை சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கு இன்ஸ்டாகிராமில் அடையாளம் தெரியாத 2 பேர் மெசேஜ் அனுப்பினர். பின்னர் அந்த இளம்பெண்ணும், அவர்களுடன் பேசிப் பழகி நண்பர்கள் ஆனார்கள். இந்தநிலையில் அந்த இளம்பெண்ணுக்கு, அவர்கள் ஆபாச புகைப்படங்களையும், ஆபாச குறுந்தகவலையும் அனுப்பினர். இதனால் அதிர்ச்சியடைந்த இளம்பெண் புதுச்சேரி சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார்.அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர்கள் சென்னை மவுலிவாக்கத்தை சேர்ந்த லோகேஷ், 28; திருவள்ளூர் மாவட்டம் பாக்கத்தை சேர்ந்த குகன் 25, என்பது தெரிய வந்தது. அதையடுத்து அவர்கள் இருவரையும் சைபர் கிரைம் போலீசார் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்













முக்கிய வீடியோ