மேலும் செய்திகள்
கஞ்சா விற்பனை வாலிபர் கைது
21-Dec-2024
புதுச்சேரி: புதுச்சேரியில் கஞ்சா விற்ற ௨ வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.இ.சி.ஆர்., மகாத்மா நகர் சந்திப்பில், கஞ்சா விற்பதாக டி. நகர் போலீசாருக்கு நேற்று தகவல் வந்தது. அதையடுத்து, சப் இன்ஸ்பெக்டர் ரமேஷ் மற்றும் போலீசார் அந்த பகுதியில் சோதனை செய்தனர். அங்கு நின்ற 2 வாலிபர்கள் போலீசாரை கண்டதும் தப்பியோட முயற்சித்தனர். அவர்களை துரத்திப் பிடித்து விசாரித்தில், அரியாங்குப்பத்தை சேர்ந்த ரவிக்காந்த ஜான்மேரி (எ) பரத், 21, ரோடியார் பேட் பகுதியை சேர்ந்த சக்திவேல், 20, எனவும், அவர்கள் கஞ்சா வைத்திருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர். அவர்களிடம் இருந்து 5 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள 70 கிராம் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட இருவரையும் நேற்று கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
21-Dec-2024