உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / உஸ்... அப்பாடா... ஓயாமல் உழைத்த கார்களுக்கு ஓய்வு

உஸ்... அப்பாடா... ஓயாமல் உழைத்த கார்களுக்கு ஓய்வு

புதுச்சேரி: புதுச்சேரியில் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்ததால், அமைச்சர் மற்றும் எம்.எல்.ஏ.,க்கள் பயன்படுத்திய கார்கள் சட்டசபையில் ஒப்படைக்கப்பட்டு வருகிறது. லோக்சபா தேர்தல் அறிவித்தது முதல் தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வந்தது. புதுச்சேரியில் அமைச்சர், எம்.எல்.ஏ.,க்களுக்கு அரசு சார்பில் கார்னிவல், இன்னவோ கிரிஸ்டா, எம்.ஜி., மகேந்திரா ஸ்கார்பியோ உள்ளிட்ட சொகுசு கார்கள் வழங்கப்பட்டுள்ளது.தேர்தல் நடத்தை விதிகளை பின்பற்றி அமைச்சர், எம்.எல்.ஏ.,க்களுக்கு வழங்கப்பட்ட அரசு வாகனங்கள் சட்டசபையில் ஒப்படைக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டது. அதை ஏற்று அமைச்சர் லட்சுமிநாராயணன் மற்றும் எம்.எல்.ஏ.,க்கள் சிலர் தங்களுக்கு வழங்கப்பட்ட கார்களை சட்டசபையில் நேற்று ஒப்படைத்தனர். மேலும், சட்டசபை வளாகத்தை தவிர்த்து, தொகுதிகளில் இயங்கி வந்த எம்.எல்.ஏ., அலுவலகங்களை தேர்தல் துறை பூட்டி சீல் வைத்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ