| ADDED : நவ 20, 2025 05:53 AM
பாகூர்: சோரியாங்குப்பம் உலகநாத களரானந்த சித்தர் குருபூஜை விழாவில், ஏராளமானோர் தரிசனம் செய்தனர். பாகூர் அடுத்த சோரியாங்குப்பம் கிராமத்தில், அரசு நடுநிலைப் பள்ளி வளாகத்தில் உலகநாத களரானந்த சித்தர் பீடம் அமைந்துள்ளது. இங்கு, ஒவ்வொரு ஆண்டும், கார்த்திகை அமாவாசை தினத்தன்று குருபூஜை விழா நடைபெறுவது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டு கார்த்திகை அமாவாசையையொட்டி, குரு பூஜை விழா நேற்று நடந்தது. காலை 7:00 மணியளவில் சித்தரின் திருவுருவச் சிலை வீதியுலா நடந்தது. அதனை தொடர்ந்து, மதியம் 12:00 மணியளவில் சிறப்பு படையல் போடப்பட்டது. பின், அன்னதானம் வழங்கப்பட்டது. குருபூஜை விழாவில், சோரியாங்குப்பம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த ஏராளமானோர் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை, சோரியாங்குப்பம் கிராம மக்கள் செய்திருந்தனர்.