உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  ஆரோவில்லில் மார்கழி மாத விழா மத்திய அமைச்சருக்கு அழைப்பு

 ஆரோவில்லில் மார்கழி மாத விழா மத்திய அமைச்சருக்கு அழைப்பு

வானுார்: ஆரோவில்லில் வரும் மார்கழி மாத விழாவிற்கு, நிதி அமைச்சருக்கு, அறக்கட்டளை செயலாளர் அழைப்பு விடுத்துள்ளார். டில்லியில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தராமனை, ஆரோவில் அறக்கட்டளை செயலாளர் ஜெயந்தி ரவி நேற்று சந்தித்து பேசினார். அப்போது, ஆரோவில்லில் வரும் மார்கழி மாத விழாவில் பங்கேற்கும் படி அவருக்கு அழைப்பு விடுத்து, அதற்கான அழைப்பிதழை வழங்கினார். மேலும், ஆரோவிலில் நடந்து வரும் வளர்ச்சி திட்ட பணிகள், புதிய முன்னேற்றங்கள் மற்றும் முக்கிய திட்டங்கள் குறித்தும் விளக்கினார். ஆரோவிலின் வளர்ச்சி, கல்வி, கலாசாரம் மற்றும் நிலைத்தன்மை போன்ற துறைகளில் நடக்கும் செயல்பாடுகள் குறித்தும் விளக்கம் அளிக்கப்பட்டது. இந்த சந்திப்பு, ஆரோவில்லின் எதிர்கால பணிகளுக்கு தேசிய அளவில் மேலும் நல்ல ஆதரவைப் பெற உதவும் என அறக்கட்டளை செயலாளர் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்