தலை கீழாக யோகா எஸ்.பி., அசத்தல்
புதுச்சேரி : சர்வதேச யோகா தினத்தில், சைபர் கிரைம் எஸ்.பி., தலை கீழாக நின்று யோகாசனம் செய்தார்.புதுச்சேரி சைபர் கிரைம் போலீசார் சார்பில், சர்வதேச யோகா தினம், கோரிமேடு காவலர் பயிற்சி மைதானத்தில் நேற்று நடந்தது. நிகழ்ச்சியில், சைபர் கிரைம் எஸ்.பி., பாஸ்கரன், 60, இவர் தலை கீழாக நின்று யோகாசனம் செய்தார். வயதை பொருட்படுத்தாமல், அவர் யோகாசனம் செய்தது போலீசாரிடம் பெரும் வியப்பை ஏற்படுத்தியது. யோகா தின நிகழ்ச்சியில், சைபர் கிரைம் சப் இன்ஸ்பெக்டர், சப் இன்ஸ்பெக்டர்கள், போலீசார் கலந்து கொண்டனர்.