| ADDED : டிச 08, 2025 05:19 AM
புதுச்சேரி: வம்பாகீரப்பாளையம் சுனாமி நினைவிடத்தில் சிலை அமைக்கும் பணியினை விரைந்து முடிக்க வேண்டும் என, பொதுப்பணித்துறை செயற்பொறியாளரிடம் அனிபால் கென்னடி எம்.எல்.ஏ., வலியுறுத்தினார். புதுச்சேரி பொதுப்பணித்துறைகட்டடங்கள் மற்றும் சாலைகள் (தெற்கு) கோட்டம் சார்பில், உப்பளம் தொகுதி, வம்பாகீரப்பாளையம் பாண்டி மெரினா அருகில் ரூ. 24.05 லட்சம் மதிப்பில் சுனாமி நினைவிடம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இப்பணிகளை தொகுதி எம்.எல்.ஏ., அனிபால்கென்னடி நேற்று அதிகாரிகளுடன் சென்று ஆய்வு செய்தார். தொடர்ந்து பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் சந்திரகுமாரை சந்தித்து, வரும் 26ம் தேதிக்குள் சுனாமி நினைவிடத்தில் சிலை அமைக்கும் பணியினை முடிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார். அதற்கு பணிகள் குறித்து விரிவாக விளக்கி, பணிகளை விரைவாக முடித்து தருவதாக அதிகாரிகள் உறுதி அளித்தனர். அப்போது தொகுதி செயலாளர் சக்திவேல், தணிகாசலம், தொகுதி துணை செயலாளர் ராஜி, இளைஞர் அணி மணிகண்டன், கிளை செயலாளர்கள் காலப்பன், இசாக்கு, ராகேஷ், அஜித்ராஜி, ரகுமான், ஜஸ்தான், தொழில்நுட்ப அணி சுகுமார், மாணவர் அணி பவி , மரி உடனிருந்தனர்.