உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  உள் புகார் குழு அமைக்காவிட்டால் வணிக நிறுவனங்கள் மீது நடவடிக்கை; உழவர்கரை நகராட்சி ஆணையர் எச்சரிக்கை

 உள் புகார் குழு அமைக்காவிட்டால் வணிக நிறுவனங்கள் மீது நடவடிக்கை; உழவர்கரை நகராட்சி ஆணையர் எச்சரிக்கை

புதுச்சேரி: பெண்கள் பணி செய்யும் வணிக நிறுவனங்களில் ஒரு வாரத்தில் உள் புகார் குழு அமைக்க உழவர்கரை நகராட்சி ஆணையர் சுரேஷ்ராஜ் எச்சரித்துள்ளார். அவரது செய்திக்குறிப்பு: பெண்கள் பணிபுரியும் வணிக நிறுவனங்களில், பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் குறித்து விசாரித்திட உள் புகார் குழு அமைக்க உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. அதன்படி, உழவர்கரை நகராட்சி பகுதிகளில் 10க்கும் மேற்பட்ட பெண்கள் பணிபுரியும் வணிக நிறுவனங்களில் உள் புகார் குழுவை ஒரு வாரத்தில் உருவாக்கி, அதனை ஷீ-பாக்ஸ் (https://shebox.wcd.gov.in/) என்ற இணையதளத்தில் பதிவு செய்து, அத்தகவலை நகராட்சியிடம் அறிக்கை சமர்ப்பித்திட வேண்டும்.தவறினால், சம்மந்தப்பட்ட வணிக நிறுவனங்கள் மீது புதுச்சேரி நகராட்சிகள் சட்டம், 1973ன் படி நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி