உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / வைகாசி விசாகப் பெருவிழா

வைகாசி விசாகப் பெருவிழா

புதுச்சேரி : புதுச்சேரி வெண்ணெய் வேலவர் ஆன்மீக நற்பணி மன்றம் சார்பில் வைகாசி விசாகப் பெருவிழா தட்டாஞ்சாவடி கம்பிளி சாமி மடம் வளாகத்தில் நடந்தது.விழாவினை, கம்பளி சாமி மடம் மடாதிபதி ஆனந்தபாலயோகி பவனானி துவக்கி வைத்தார். சிறப்பு அழைப்பளராக புதுவை தமிழ்சங்கம் பொருளாளர் அருள்செல்வம், புதுச்சேரி கந்தர் சஷ்டி கவச பராயணக்குழு ஆலோசகர் குமரன், கவுவத் தலைவர் சீனுமோகன் தாஸ், நற்பணி மன்றம் கவுரவத் தலைவர் ரவி ஆகியோர் கலந்து கொண்டனர். முன்னதாக காலை சுவாமிக்கு சிறப்பு அபி ேஷகம் ஆராதனைகள் நடந்தது. தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.ஏற்பாடுகளை வெண்ணெய் வேலவர் ஆன்மீக நற்பணி மன்றம் முருகன் அடியார் முருகபாபுஜி செய்திருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி