பல்கலைக்கழகத்தில் வந்தே மாதரம் விழா
புதுச்சேரி: தேசிய பாடல் வந்தே மாதரம் இயற்றப்பட்டு 150வது ஆண்டு விழா, பல்கலைக்கழகத்தில் கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு பல்கலைக்கழக துணைவேந்தர் பிரகாஷ்பாபு தலைமை தாங்கி, பேசுகையில், 'வந்தே மாதரம் 150 ஆண்டுகள் கடந்து கொண்டாடுவது மகிழ்ச்சி அளிக்கிறது. இப்பாடல் இலக்கியத்தை தாண்டி, இந்தியாவின் சுதந்திர போராட்டத்தின் ஆன்மாவாக மாறியது. வந்தே மாதரம், சுதந்திர இயக்கத்தின் இதய துடிப்பாக இருந்து, தைரியம், ஒற்றுமை, தியாகம் ஆகியவற்றை ஊக்குவித்து மக்களை ஒன்றிணைத்துள்ளது. எனவே மாணவர்கள், ஆசிரியர்கள், கல்வி, புதுமை, நெறிமுறை, தலைமைத்துவம், சமூக பொறுப்புணர்வின் வழியாக வந்தே மாதரம் உணர்வை முன்னெடுக்க வேண்டும்' என்றார். நிகழ்ச்சியில், பேராசிரியர்கள், மாணவர்கள், ஊழியர்கள் கலந்து கொண்டனர்.