மேலும் செய்திகள்
விவேகானந்தா கல்லுாரி கடற்கரையில் துாய்மை பணி
6 hour(s) ago
மாநில பா.ஜ., தலைவர் பேராயருடன் சந்திப்பு
6 hour(s) ago
புதுச்சேரி: சோலை நகர் வடக்கு பகுதி மக்களின் கோரிக்கைக்கு ஏற்ப, சாலை அமைக்க வேண்டும் என, அ.தி.மு.க., மாநில துணை செயலாளர் வையாபுரி மணிகண்டன் வலியுறுத்தியுள்ளார்.அவரது அறிக்கை:முத்தியால்பேட்டை, சோலை நகர், வடக்கு சுனாமி குடியிருப்பில் மீனவ மக்கள் வசிக்கின்றனர். அவர்களின் வசதிக்காக நகராட்சி சார்பில் தார் சாலை போடப்பட்டுள்ளது. கோவில் மற்றும் மீனவ பஞ்சாயத்துக்கு சொந்தமான இடத்தில், இளைஞர்கள், மாணவர்கள் திறனை வளர்த்துக்கொள்ள விளையாட்டு மைதானம் உள்ளது.இந்த மைதானத்தை, இரண்டாக பிரித்து, சாலை அமைத்து, சுய லாபத்துக்காக கபளீகரம் செய்ய அதிகாரத்தில் உள்ளவர்கள், திட்டமிட்டுள்ளனர். இதற்காக நகராட்சி அதிகாரிகளை நிர்பந்தம் செய்து மைதானத்தின் குறுக்கே சாலை அமைக்க திட்டம் வகுக்கப்பட்டு பணிகள் நடந்து வருகின்றன.இதை கண்டித்து சோலை நகர் வடக்கு பகுதி மக்கள், மறியல் நடத்தி, எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் நகராட்சி அதிகாரிகள் செவிசாய்க்கவில்லை. இதற்கு அதிகாரத்தில் உள்ளவர்களின் நெருக்கடி காரணம் என அதிகாரிகள் புலம்புகின்றனர்.அப்பகுதி மக்களின் கோரிக்கைக்கு ஏற்ப சாலை அமைக்கும் பணியை நகராட்சி அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும். அவர்களுக்கு இடையூறு ஏற்படுத்தி, உரிமைகளை தட்டிப்பறிக்கும் வகையில், நகராட்சி அதிகாரிகள், அதிகாரத்தில் உள்ளவர்கள் செயல்படுவதை கண்டிக்கிறோம். இந்த விவகாரத்தில், அப்பகுதி மக்களோடு இணைந்து அ.தி.மு.க., போராடும்.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
6 hour(s) ago
6 hour(s) ago