உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / சார் பதிவாளர் அலுவலகத்தில் வி.சி., கட்சியினர் தர்ணா

சார் பதிவாளர் அலுவலகத்தில் வி.சி., கட்சியினர் தர்ணா

மங்கலம்பேட்டை : மங்கலம்பேட்டை சார் பதிவாளர் அலுவலகம் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் புதிதாக கட்டி முடிக்கப்பட்டு, திறப்பு விழா நடந்தது. பழைய அலுவலக கட்டடத்தில், அம்பேத்கர், காந்தி உள்ளிட்ட தலைவர்கள் படங்கள் வைக்கப்பட்டிருந்தன. ஆனால், புதிய அலுவலக கட்டடத்தில் இதுவரை அவர்களது படங்கள் வைக்கப்படவில்லை.இதுகுறித்து கேட்டபோது, அதிகாரிகள் அலட்சியமாக பதில் கூறியுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த இந்திய குடியரசு கட்சி, வி.சி., உள்ளிட்ட கட்சியினர் அலுவலக வளாகத்தில் அம்பேத்கர் உள்ளிட்ட தலைவர்கள் படங்களை வைக்க வேண்டும் என கூறி, அலுவலகம் முன்பு நேற்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.மங்கலம்பேட்டை போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து கலைந்து சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !