உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / லாஸ்பேட்டை கோவிலில் வேல் வாங்கும் நிகழ்ச்சி

லாஸ்பேட்டை கோவிலில் வேல் வாங்கும் நிகழ்ச்சி

புதுச்சேரி: லாஸ்பேட்டை சிவசுப்ரமணிய சுவாமி கோவிலில் கந்தசஷ்டி பெருவிழாவை முன்னிட்டு, வேல் வாங்கும் நிகழ்ச்சி நடந்தது. லாஸ்பேட்டை சிவசுப்ரமணிய கோவிலில் கந்தசஷ்டி பெருவிழா கடந்த 22ம் தேதி துவங்கி நடந்து வருகிறது. தினமும் சுவாமிக்கு யாகசாலை பூஜைகள், சிறப்பு அபிேஷக ஆராதனை, இரவு சுவாமி வீதியுலா நடந்து வருகிறது. நேற்று காலை 11:00 மணிக்கு சிங்கமுகா சூரன் முருகப்பெருமானுடன் போருக்கு செல்லும் நிகழ்ச்சியை தொடர்ந்து, இரவு 8 மணிக்கு சக்திவேல் வாங்குதல் நிகழ்ச்சி நடந்தது. இன்று இரவு 8 மணிக்கு சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடக்கிறது. நாளை மாலை 6.00 மணிக்கு திருக்கல்யாணம் உற்சவம் நடக்கிறது. ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ