உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / 100 நாள் வேலை கேட்டு கிராம மக்கள் சாலை மறியல்: 1 மணி நேரம் போக்குவ ர த்து பாதிப்பு

100 நாள் வேலை கேட்டு கிராம மக்கள் சாலை மறியல்: 1 மணி நேரம் போக்குவ ர த்து பாதிப்பு

திருபுவனை: திருபுவனை அருகே 100 நாள் வேலை வழங்காததை கண்டித்து பணியாளர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். புதுச்சேரி திருபுனை அருகே கே.குச்சிப்பாளையம், சிலுக்காரிப்பாளையம், மயிலம் பாதை ஆகிய பகுதிகளில் 500 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்களுக்கு. 2024ம் ஆண்டு 100 நாள் வேலை க்கு 3 வாரங்கள் மட்டுமே வேலை வழங்கப் பட்டுள்ளது. 2025ம் ஆண்டு இதுவரை 100 நாள் வேலை வழங்கவில்லை. இது குறித்து பணியாளர்கள் பல்வேறு கட்டமாக அதிகாரிகளிடம் வேலை வழங்கக்கோரி முறையிட்டனர். இருந்து வேலை வழங்கப்படவில்லை. இதனால் ஆத்திரமடைந்த மூன்று கிராம மக்கள் நேற்று காலை.10;00 மணிக்கு குச்சிப்பாளையம் பஸ் நிறுத்தம் அருகே மா.கம்யூ., கிளை செயலாளர் நாகராஜன் தலைமையில் திடீர் சாலை மறியல் போராட்டத் தில் ஈடுபட்டனர். இதில் திருபுவனை வட்டார காங்., பொதுச்செயலாளர் வேலு மற்றும் மா.கம்யூ., கிளை நிர்வாகிகள் நாகப்பன்,, பாலசுந்தரம், வீரப்பன், நாகமணி, பன்னீர்செல்வம் உள்பட 3 கிராம மக்கள்கலந்துகொண்டனர். தகவல் அறிந்த வில்லியனுார் வட்டார வளர்ச்சி அலுவலக அதிகாரிகள் , திருபுவனை சப் இன்ஸ்பெக்டர் கதிரேசன் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் அங்கிருந்து கிராம மக்களை பி.எஸ் பாளையம் பம்பை ஆற்றங்கரை பகுதிக்கு அழைத்துச் சென்று வேலை செய்ய வேண்டிய இடத்தை அளந்து, வரும் 11ம் தேதி முதல் வேலை செய்யலாம் என உறுதி அளித்தனர். இதையடுத்து 3 கிராம மக்கள் காலை 11.15 மணிக்கு போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த போராட்டத்தால் மதகடிப்பட்டு - திருக்கனுார் சாலையில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி