உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / வில்லியனுார் மாவட்ட பா.ஜ., தலைவர் பதவியேற்பு

வில்லியனுார் மாவட்ட பா.ஜ., தலைவர் பதவியேற்பு

புதுச்சேரி: வில்லியனுார் மாவட்ட பா.ஜ., தலைவராக பதவியேற்று கொண்ட அனிதாவிற்கு, அமைச்சர் நமச்சிவாயம் வாழ்த்து தெரிவித்தார்.புதுச்சேரி பா.ஜ., கட்சியின் புதிய நிர்வாகிகள் தேர்தல் நடந்து, 30 தொகுதிகளுக்கும் புதிய தலைவர்கள் தேர்வு செய்யப்பட்டனர். பின்னர், நகரம், வில்லியனுார், அரியாங்குப்பம், உழவர்கரை, காரைக்கால் ஆகிய 5 மாவட்ட தலைவருக்கான தேர்தல் நடந்தது.இதில், வில்லியனுார் மாவட்ட புதியதலைவராக 2வது முறையாக அனிதா மீண்டும் தேர்வு செய்யப்பட்டார். இவர், மகளிர் அணி மாநில துணை தலைவி, பொதுச் செயலாளர், மாவட்ட தலைவர் உள்ளிட்ட பதவிகளை வகித்துள்ளார்.வில்லியனுார் கோபால்சாமி நாயக்கர் திருமண மண்டபத்தில் நடந்த பதவியேற்பு விழாவிற்கு, அமைச்சர் நமச்சிவாயம் தலைமை தாங்கினார். பொதுச் செயலாளர் மோகன்குமார், வெற்றிச்செல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.விழாவில், வில்லியனுார் மாவட்ட தலைவராக 2வது முறையாக பதவி ஏற்றுக் கொண்ட அனிதா, கட்சியின் வளர்ச்சிக்கு அனைவரும் உழைக்க வேண்டும். புதுச்சேரியில் மீண்டும் பா.ஜ, ஆட்சியை பிடிக்க உறுதுணையாக இருக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ