| ADDED : பிப் 28, 2024 07:16 AM
புதுச்சேரி : புதுச்சேரி தலைமை செயலகம் எதிரில் கடலில் குளித்த சுற்றுலா பயணிகளை போலீசார் எச்சரித்து அனுப்பினர்.புதுச்சேரிக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகள் மற்றும் உள்ளூர் மக்கள் தலைமை செயலகம் எதிரில் செயற்கை மணல் பரப்பில் விளையாடி மகிழ்வதோடு, கடலில் இறங்கி குளிக்கின்றனர். அப்போது, அலையில் சிக்கி உயிரிழக்கும் சம்பவம் அதிகரித்து வருகிறது.புதுச்சேரி கடற்கரையில் குளிக்க ஏற்கனவே தடை உள்ளது. இருப்பினும் பெரியக்கடை போலீசார் கடற்கரை பகுதியில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது என, எச்சரிக்கை பலகை வைத்ததோடு, அங்கு போலீசார் நியமிக்கப்பட்டு கடலில் தடையை மீறி குளிக்கும் சுற்றுலா பயணிகள் எச்சரித்து அனுப்பப்படுகின்றனர். தற்போது வெயில் காலம் துவங்கியதால் சுற்றுலா வரும் பயணிகள் மாலை நேரங்களில் திடீரென கடலில் இறங்கி குளிக்கின்றனர். இதையடுத்து நேற்று சீனியர் எஸ்.பி., ஸ்வாதி சிங் தலைமையில் பெரியக்கடை மற்றும் ஒதியஞ்சாலை போலீசார், தலைமை செயலகம் எதிரில், குளிக்க தடை விதித்து, அறிவிப்பு பலகை வைத்தனர். தொடர்ந்து கடலில் குளித்தவர்களை போலீசார் எச்சரித்து அனுப்பினர்.