உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / திருக்கல்யாண உற்சவம்

திருக்கல்யாண உற்சவம்

புதுச்சேரி: தட்டாஞ்சாவடி வள்ளி தேவசேனா சமேத சுப்ரமணிய சுவாமி கோவிலில் திருக்கல்யாண உற்சவம் நடந்தது. விழாவையொட்டி சுவாமிக்கு காலை சிறப்பு அபி ேஷகம் ஆராதனைகளும், தீபாரதனை நடந்தது. இரவு வள்ளி தெய்வானை–சுப்பரமணிய சுவாமி திருக்கல்யாணம் வைபவம் நடந்தது. முன்னதாக மாலை மாற்றுதல் நிகழ்ச்சி நடந்தது. விழாவில் தட்டாஞ்சாவடி தொகுதி எம்.எல்.ஏ., அசோக் ஆனந்த் சாமி தரிசனம் செய்தார். பின் விழாவில் பங்கேற்ற பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினார். ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ