உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / புதரில் பாழாகி வரும் டிஜிட்டல் மியூசியம் டெண்டர்; பஞ்சாயத்து முடிவுக்கு வருவது எப்போது?

புதரில் பாழாகி வரும் டிஜிட்டல் மியூசியம் டெண்டர்; பஞ்சாயத்து முடிவுக்கு வருவது எப்போது?

முருங்கப்பாக்கம் கைவினை கிராமத்தில், பல்வேறு கைவினை பொருட்கள் தயாரித்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது. புதுச்சேரிக்கு வரும் சுற்றுலா பயணிகள் கைவினை கிராமத்தை பார்வையிட்டு செல்கின்றனர். அவ்வாறு வரும் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்க சுற்றுலாத்துறை மூலம் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.இந்நிலையில், சுற்றுலா பயணிகள் புதுச்சேரியின் பண்டைய வரலாற்று தகவல்களை தெரிந்து கொள்வதற்காக அரிக்கன்மேட்டில் நடந்த அகழ்வாராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்ட ரோமானியர்கள் பயன்படுத்திய களிமண் பாண்டங்கள், பீங்கான் பொருட்கள், விலை உயர்ந்த மணி மாலைகள் என பல வகையான பொருட்களை காட்சிப்படுத்த, மத்திய சுற்றுலாத்துறை சார்பில் ரூ.10 கோடி மதிப்பில் கடந்த 2022ம் ஆண்டு டிஜிட்டல் மியூசியம் கட்டி முடிக்கப்பட்டது.மேலும், இந்த மியூசியத்தில், டிஜிட்டல் ேஷா, நுாலகம், புத்தக விற்பனை நிலையம், மாநாட்டு கூடம் என தனித் தனியாக வடிவமைக்கப்பட்டுள்ளது. கட்டடம் கட்டப்பட்டு மூன்றாண்டாகியும் இதுவரை திறக்கப்படவில்லை. காரணம், இந்த மியூசியத்தை கட்டிய சுற்றுலா துறை, டெண்டர் விட்டு, தனியார் மூலம் பராமரிக்க திட்டமிடப்பட்டது.ஆனால், என்ன காரணத்தினாலோ, மியூசியத்தை டெண்டர் விடாத காரணத்தினால், பராமரிப்பின்றி, மியூசியத்தை சுற்று செடி, கொடிகள் முளைந்து புதர் மண்டி, பாழடைந்து வருகிறது. மேலும் கட்டடத்தின், பக்க வாட்டு சுவர்களில், சிமென்ட் காரைகள் பெயர்ந்து விழுந்து பாழாகி வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை