உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / வேட்பாளர் யார்? கட்சிகள் கப் சிப்

வேட்பாளர் யார்? கட்சிகள் கப் சிப்

புதுச்சேரியில் தேர்தல் பரபரப்பு கடந்த மாதமே தொற்றி கொண்டது. பா.ஜ., - என்.ஆர். காங்., கூட்டணி, காங்., - தி.மு.க., கூட்டணி, அ.தி.மு.க., என மும்முனை போட்டி உறுதியாகி விட்டது.மூன்று கூட்டணியிலும் வேட்பாளர் யார் என்பது இதுவரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. இருந்தபோதும், கடந்த ஒரு மாதமாக, ஒவ்வொரு வாரத்திற்கும் ஒரு வேட்பாளர் பெயர் சமூக வலைத்தளத்தில் வெளியிடப்பட்டு வருகிறது. குறிப்பாக, பா.ஜ., வேட்பாளர் என மத்திய அமைச்சர், கவர்னரில் ஆரம்பித்து, அமைச்சர், எம்.எல்.ஏ., கட்சி நிர்வாகிகள் என பலரது பெயர்கள் வெளியாகி விட்டது. இதனால், தொண்டர்கள் சோர்வடைந்து விட்டனர். மக்கள் மத்தியிலும் எரிச்சலை ஏற்படுத்தி வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி