உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / சேது செல்வம் விலகியது ஏன்? இந்திய கம்யூ., மாநில செயலாளர் விளக்கம்

சேது செல்வம் விலகியது ஏன்? இந்திய கம்யூ., மாநில செயலாளர் விளக்கம்

புதுச்சேரி: கட்சியின் ஒழுங்கு நடவடிக்கையை மறைக்கவே சேது செல்வம், கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார் என இந்திய கம்யூ., மாநில செயலாளர் சலீம் கூறினார். இதுகுறித்து அவர் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: இந்திய கம்யூ., கட்சியின் நிர்வாக குழு உறுப்பினராக இருந்த சேது செல்வம் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். அதற்கு அவர் கூறிய காரணம் உண்மை அல்ல. அவர் கட்சி கொள்கைக்கு எதிராக, பிரெஞ்சு குடியுரிமை பெற்றவரின் இடத்தை தி.மு.க.,வை சேர்ந்த முன்னாள் அமைச்சர் சிவக்குமார் காலி செய்யாத விவகாரத்தில் கட்டப்பஞ்சாயத்து செய்து ரூ.15 லட்சம் பெற்றதாக புகார் வந்தது. அதுகுறித்து, அவரிடம் விளக்கம் கேட்கப்பட்டது. முதலில் மறுத்தவர், பின் ஆதாரங்களுடன் நிருபிக்கப்பட்டதும் பணம் பெற்றதை ஒப்புக் கொண்டார். அதனைத் தொடர்ந்து, கடந்த 7ம் தேதி அவரை கட்சியில் இருந்து ஓராண்டிற்கு சஸ்பெண்ட் செய்யப்பட்டார். அதற்கு அவர் உடன்பட்டு, கையெழுத்தும் இட்டார். இதையெல்லாம் மறைத்து அவர் தவறான கருத்துகளை தெரிவித்துள்ளார். அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி