உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / நடிகர் பார்த்திபன் - அமைச்சர் திடீர் சந்திப்பு ஏன்?

நடிகர் பார்த்திபன் - அமைச்சர் திடீர் சந்திப்பு ஏன்?

புதுச்சேரி: புதுச்சேரியில் நடிகர் பார்த்திபன் அமைச்சர் லட்சுமி நாராயணனை சந்தித்தார்.சினிமா நடிகர் பார்த்திபன் புதிதாக சினிமா ஒன்றை தயாரிக்க திட்டமிட்டுள்ளார். இந்தநிலையில் அவர் புதுச்சேரி வந்தார். இங்கு சட்டசபை வளாகத்தில் அமைச்சர் லட்சுமி நாராயணனை திடீரென சந்தித்தார். அப்போது அவரிடம், புதுச்சேரியை மையப்படுத்தி ஒரு சினிமா தயாரிக்க உள்ளதாகவும், அதற்கு அரசின் உதவி வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார். அதற்கு அமைச்சர் லட்சுமி நாராயணன் தேவையான உதவிகளை செய்து தருவதாக, அவரிடம் உறுதி அளித்தார். இதையடுத்து பார்த்திபன் செய்தியாளர்களிடம் கூறுகையில், ''இந்த படத்தின் கதாநாயகன் நான் தான். இது ஒரு காதல் கதை. முழுக்க முழுக்க புதுச்சேரியில் தான் தயாரிக்கப்பட இருக்கிறது. இங்கு, 99 சதவீத படப்பிடிப்பு நடத்தப்பட உள்ளது,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ