உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / இடிந்து விழுந்த கழிவுநீர் உந்து நிலைய சுற்றுச்சுவர் சீரமைக்கப்படுமா?

இடிந்து விழுந்த கழிவுநீர் உந்து நிலைய சுற்றுச்சுவர் சீரமைக்கப்படுமா?

கருவடிக்குப்பம், கழிவுநீர் உந்து நிலைய சுற்றுச்சுவர் இடிந்துள்ளதால், அங்குள்ள பொருட்கள் திருடு போகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. புதுச்சேரி, கருவடிக்குப்பத்தில் பொதுப்பணித்துறை சார்பில், கழிவுநீர் உந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு, தினமும் 17 மில்லியன் லிட்டர் கழிவுநீர் சுத்திகரிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், கழிவுநீர் உந்து நிலையத்தை சுற்றிலும் பாதுகாப்பிற்கான 10 அடி உயர சுற்றுச்சுவர் அமைக்கப்பட்டு உள்ளது. இதற்கிடையே, இடையஞ்சாவடி செல்லும் சாலையை ஒட்டியுள்ள சுற்றுச்சுவரின் ஒரு பகுதி கடந்த சில மாதங்களுக்கு முன்பு இடிந்து விழுந்தது. இடிந்து விழுந்த சுற்றுச்சுவர் இதுவரையில் சீரமைக்கப் படாமல் உள்ளதால், அவ்வழியாக யார் வேண்டுமானாலும் கழிவுநீர் உந்து நிலையத்தின் உள்ளே செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனைச் சாதகமாகப் பயன்படுத்தி கொண்டு, மர்ம நபர்கள் சிலர் இரவு நேரங்களில் கழிவுநீர் உந்து நிலையம் உள்ளே சென்று சமூக விரோத செயல்களில் ஈடுபடுவதுடன், அங்குள்ள பொருட்கள் திருடி செல்லும் சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே, கழிவுநீர் உந்து நிலையத்தின் பாதுகாப்பை உறுதி செய்யும் பொருட்டு, இடிந்து விழுந்த சுற்றுச்சுவரை உடனடியாக அமைப்பதற்கு, பொதுப்பணித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி