மேலும் செய்திகள்
இயற்கையை பாதுகாக்க வலியுறுத்தி சைக்கிள் பயணம்
17-Nov-2025
விவேகானந்தா கல்லுாரியில் கைவினை பயிற்சி பட்டறை
17-Nov-2025
ஓட்டு திருட்டு விழிப்புணர்வு கூட்டம்
17-Nov-2025
தீயணைப்பு பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி
17-Nov-2025
புதுச்சேரி: புதுச்சேரியில் தேசிய ஜனநாயக கூட்டணி தொடருமா என்பது தேர்தல் நேரத்தில் தெளிவாக தெரிய வரும் என முதல்வர் ரங்கசாமி கூறினார். இதுகுறித்து அவர் நேற்று சட்டசபையில் நிருபர்களிடம் கூறியதாவது: பீகார் தேர்தல் முடிவுகள் மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. 2026லும் இது எதிரொலிக்கும். தேசிய ஜனநாயக கூட்டணியில் தான் தற்போது இருந்து வருகிறோம். கூட்டணி தொடருமா என்பது குறித்து தேர்தல் நேரத்தில் தெரிய வரும். மாநில அந்தஸ்தை தொடர்ந்து கேட்டு வருகிறோம். ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் கட்சி துவங்கலாம். என் மீது கூறப்படும் குற்றச்சாட்டுகளுக்கு உரிய நேரத்தில் பதில் அளிப்பேன். அமைச்சர் ஜான்குமாருக்கு விரைவில் இலாகா ஒதுக்கப்படும். பா.ஜ.,வுடன் எந்த கருத்து வேறுபாடும் இல்லை. மழையை எதிர்கொள்ள எனது அரசு அனைத்து முனனெச்சரிக்கை நடவடிக்கையும் எடுத்துள்ளது. குடும்ப தலைவிகளுக்கான உதவித் தொகை முதலில் மஞ்சள் ரேஷன் கார்டுதாரர்களுக்கு வழங்குவோம். பின்னர், சிவப்பு ரேஷன் கார்டுதாரர்களுக்கான உயர்த்தி வழங்கப்படும். ரேஷன் கார்டிற்கு கோதுமை வழங்குவதற்கு டெண்டர் பணி முடிந்துவிட்டது, 10 நாளில் தருவோம். காமராஜர் கல்வீடு வீடு கட்டும் திட்டத்தில் 1750 வீடுகள் கட்ட நிதியுதவி வழங்க மத்திய அரசு அனுமதி தந்துள்ளது. எனவே விரைவில் முதல் கட்ட நிதி தரப்படும். குமரகுருபள்ளம் குடியிருப்புகளை அங்கு குடியிருப்பவர்களே பராமரிக்க வேண்டும். அதனை பேசி முடித்ததும் வீடுகள், பயனாளிகளிடம் ஒப்படைக்கப்படும். அதேபோன்று அரசால் கட்டப்பட்ட பிற குடியிருப்புகள் 2 மாதத்தில் பயனாளிகளிடம் ஒப்படைக்கப்படும். நுாறு நாள் வேலை திட்ட சம்பள பாக்கிக்கான நிதி விடுவிக்கப்பட்டுள்ளது. மேலும், இத்திட்டத்தில் வேலை நாட்களை 12 லட்சத்தில் இருந்து 15 லட்சமாக உயர்த்திக் கொள்ள மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. எனது அரசு பொறுப்பேற்ற பின், அனைத்து துறைகளிலும் காலி பணியிடங்கள் தேர்வு முறையில் நிரப்பப்பட்டு வருகிறது. தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு தொடர்ச்சியாக பணியாணை வழங்கி வருகின்றோம். விரைவில், அசிஸ்டெண்ட் பணிக்கு தேர்வானவர்களுக்கு பணியாணை வழங்கப்படும். தற்போது 347 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிட்டுள்ளோம். போலீஸ் எஸ்.ஐ., பணிக்கு ஓரிரு மாதத்தில் உடற்தகுதி தேர்வு நடத்தப்படும். இந்த அரசு அறிவித்த அனைத்து திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறது என்றார். பேட்டியின்போது, சபாநாயகர் செல்வம், அமைச்சர் நமச்சிவாயம் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.
17-Nov-2025
17-Nov-2025
17-Nov-2025
17-Nov-2025