உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / மின் கட்டணம் யூனிட்டுக்கு 20 பைசா உயர்த்த பரிந்துரை வீடுகளுக்கு  மானியம் தொடருமா; அரசு தீவிர ஆலோசனை

மின் கட்டணம் யூனிட்டுக்கு 20 பைசா உயர்த்த பரிந்துரை வீடுகளுக்கு  மானியம் தொடருமா; அரசு தீவிர ஆலோசனை

புதுச்சேரி: புதுச்சேரியில் 1 யூனிட்டிற்கு 20 பைசா வரை மின் கட்டணத்தை உயர்த்த இணை ஒழுங்குமுறை மின்சார ஆணையம் பரிந்துரை செய்துள்ளது. புதுச்சேரி மின் துறையின் மின்சார கொள்முதல், செலவினம் ஆகியவற்றை கணக்கிட்டு இணை ஒழுங்குமுறை மின்சாரம் ஆணையம் மின் கட்டணத்தை நிர்ணயித்து வருகிறது. அக்., 1ம் தேதி முதல் கணக்கிட்டு மின் நுகர்வோருக்கான மின் கட்டணத்தை உயர்த்த வேண்டும் என, இணை ஒழுங்குமுறை மின்சார ஆணையம் பரிந்துரை செய்துள்ளது. ஒரு யூனிட்டிற்கு 20 பைசா வீதம் உயர்த்தலாம் என பரிந்துரைத்துள்ளது. இது தொடர்பாக முடிவெடுக்க புதுச்சேரி அரசின் கவனத்திற்கு மின் துறை கொண்டு சென்றுள்ளது. மானியம் தொடருமா புதுச்சேரியில் குடிசைக்கு தற்போது ஒரு யூனிட் மின்சாரம் 1.45 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. வீடுகளுக்கு முதல் 100 யூனி ட்டுக்கு 2.25 ரூபாய் வசூலிக்கப்பட்டது. இது கடந்தாண்டு ரூ.2.70 ஆக உயர்த்தப்பட்டது. இந்த இடைவெளி தொகையான 45 பைசா உயர்வு தொகை புதுச்சேரி அரசு ஏற்றுக்கொண்டு மானியம் அளித்து வருகிறது. இதேபோ ல் 101 முதல் 200 வரை யூனிட் பயன்படுத்தும் வீடுகளுக்கான மின்கட்டணம் 3.25 ரூபாயில் இருந்து 4 ரூபாயாக கடந்தாண்டு உயர்த்தப்பட்டது. இந்த 75 பைசா உயர்வில் 40 பைசாவை மானியமாக புதுச்சேரி அரசு அளித்து வருகிறது. எனவே முதல் 200 யூனிட் மின்சாரத்திற்கு மாதம் ரூ. 85 மானியமாக மின்சார பில்லில் கழித்து கொண்டு தான் வசூலிக்கப்படுகிறது. இந்தாண்டு மானியத்திற்கு ஏற்கனவே ஒப்புதல் அளிக்கப்பட்டுவிட்டது. தீவிர ஆலோசனை மின் கட்டணத்தை உயர்த்த இ ணை ஒழுங்குமுறை மின்சார ஆணையம் பரிந்துரை செய்திருந்தாலும் புதுச்சேரி அரசு எந்த முடிவுக்கும் இன்னும் வரவில்லை. அடுத்தாண்டு சட்டசபை தேர்தல் நடக்க உள்ள சூழ்நிலையி ல் மின் கட்டணத்தை ஏற்றினால் ஆளும் கட்சி மீது அதிருப்தியை ஏற்படுத்தும். எனவே மின் கட்டணத்தை உயர்த்தாமல் மீண்டும் மானியமாக ஏற்றுக்கொள்ளலாமா அல்லது இணை ஒழுங்குமுறை மின்சார ஆணையத்தின் முடிவினை எதிர்த்து அப்பீல் செய்யலாமா என தீவிரமாக ஆலோசித்து வருகிறது. ஏற்கனவே முதல் 200 யூனிட்டிற்கு மானியம் கொடுப்பதால் ஆண்டிற்கு 32 கோடி ரூபாய் மின் துறைக்கு செலவாகிறது. இப்போது கூடுதல் மானியத் தை ஏற்றால் அரசுக்கு 18 கோடி ரூபாய் கூடுதல் செலவாகும். வீடுகளுக்கு முதல் 200 யூனிட் வரை வீடுகளுக்கு மானியம். அதன் பிறகு கிடையாது. தற்போது 201 முதல் 300 யூனிட் வரை ரூ. 6 வசூலிக்கப்படுகிறது. 300 யூனிட்டுகளுக்கு மேல் 7.50 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. எச்.டி.,லைன் வர்த்தக பயன்பாட்டில் உள்ள உயர் மின் அழுத்த (எச்.டி.,) லைன் கட்டணம் தற்போது யூனிட்டுக்கு 6 ரூபாயாக வசூலிக்கப்படுகிறது. தொழிற்சாலைகள் குறைந்த அழுத்த தொழிலகங்களுக்கான கட்டணம் 7 ரூபாயாக உள்ளது. இதேபோல் 11 கே.வி., 22 கே.வி., அல்லது 33 கே.வி., இணைப்பினை பெற்றுள்ள எச்.டி., தொழிற்சாலைளுக்கான கட்டணம் 6 ரூபாய், 110 கேவி., 132 கே.வி.மின் இணைப்புகளை பெற்றுள்ள இ.எச்.டி., தொழிற்சாலைகளுக்காக கட்டணம் 6.35 ரூபாயாகவும் உள்ளது. மின் கட்டணம் அமலுக்கு வந்தால் இதில் 20 பைசா அதிகரிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !