உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / குட்கா விற்ற பெண் கைது

குட்கா விற்ற பெண் கைது

திருபுவனை: திருபுவனை அருகே குட்கா பொருட்களை விற்ற பெண்ணை போலீசார் கைது செய்தனர். புதுச்சேரி திருபுவனை அடுத்த கொத்தபுரிநத்தம் சாலையில் உள்ள ஒரு பெட்டிக்கடையில், திருபுவனை சப் இன்ஸ்பெகடர் கதிரேசன் மற்றும் போலீசார் திடீர் சோதனை நடத்தினர். அப்போது அந்த கடையில் 1150 பாக்கெட் குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர். இதையடுத்து கடை உரிமையாளர் ஜெயலட்சமி, 55; என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் போலீசார் திருவாண்டார்கோயில் கொத்தபுரிநத்தம் சாலை, சன்னியாசிக்குப்பம் சாலை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பங்க் கடைகளில் தீவிர சோதனை மேற்கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ