உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பைக் சக்கரத்தில் புடவை சிக்கி விழுந்த பெண் பலி

பைக் சக்கரத்தில் புடவை சிக்கி விழுந்த பெண் பலி

பாகூர்: கிருமாம்பாக்கம், இந்திரா நகரை சேர்ந்தவர் முனியன், 49. இவர், கடந்த 22ம் தேதி தனது மனைவி ஜெயலட்சுமி, 45, என்பவரை தனது டி.வி.எஸ்., ரேடியான் பைக்கில் அழைத்து கொண்டு, அரியூரில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். புதுச்சேரி - கடலுார் சாலை, கிருமாம்பாக்கத்தில் உள்ள தனியார் பொறியியல் கல்லுாரி அருகே சென்ற போது, ஜெயலட்சுமியின் புடவை பைக்கின் பின் சக்கரத்தில் சிக்கிக் கொண்டது. இதில், அவர் நிலை தடுமாறி சாலையில் விழுந்து படுகாயமடைந்தார். புதுச்சேரி ஜிப்மரில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார். புகாரின் பேரில், கிருமாம்பாக்கம் தெற்கு போக்குவரத்து போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை