உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / தென்னை மரம் ஏறிய தொழிலாளி சாவு

தென்னை மரம் ஏறிய தொழிலாளி சாவு

பாகூர்: பாகூர் அடுத்த குடியிருப்புபாளையம், அங்காளம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் மாரியப்பன், 61; மரம் ஏறும் தொழிலாளி. இவர் நேற்று காலை பிள்ளையார்குப்பத்தில் உள்ள ஒரு தனியார் சிறுவர் காப்பகத்தில் உள்ள தென்னை மரங்களை சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது,தென்னை மரத்தில் ஏறி மட்டைகளை வெட்டி, சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்டபோது திடீரென அவர் மயங்கிய நிலையில், மரத்திலேயே தலை கீழாக தொங்கினார். அங்கிருந்தவர்கள் வேன் ஒன்றின் மீது ஏரி, மரத்தில் தொங்கிய கொண்டிருந்த மாரியப்பனை மீட்டு, பிள்ளையார்குப்பத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். டாக்டர் பரிசோதித்து அவர், ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார். புகாரின் பேரில், கிருமாம்பாக்கம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை