உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி 

மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி 

புதுச்சேர : காலாப்பட்டு பாலமுருகன் கோவில் திருவிழாவிற்கான ஆர்ச் அமைத்த தொழிலாளி மின்சாரம் தாக்கி இறந்தார்புதுச்சேரி பெரிய காலாப்பட்டு பாலமுருகன் கோவிலில் தேர் திருவிழா துவங்கியுள்ளது. இதற்காக, இ.சி.ஆரில் கோபுர வடிவிலான ஆர்ச் அமைக்கும் பணி கடந்த 2 நாட்களாக நடந்து வருகிறது.நேற்று மாலை விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த பூபால் மகன் சஞ்சய், 26; விளம்பர நுழைவு வாயில் மீது ஏற்றி வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது, அருகில் இருந்த உயர் மின்னழுத்த கம்பி சஞ்சய் மீது உரசியதில், மின்சாரம் தாக்கி சஞ்சய் கீழே விழுந்தார்.உடன் அவரை அருகிலிருந்தவர்கள் மீட்டு, காலாப்பட்டில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு, பரிசோதனை செய்த டாக்டர் சஞ்சய் இறந்து விட்டதாக தெரிவித்தார்.புகாரின் பேரில், காலாப்பட்டு போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்