உள்ளூர் செய்திகள்

தொழிலாளி தற்கொலை 

புதுச்சேரி: பூச்சிக்கொல்லி மருந்து குடித்து வெல்டிங் தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.விழுப்புரம் மாவட்டம், நைனார்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ராம்குமார், 30; வெல்டிங் தொழிலாளி. இவருக்கு மனைவி, 2 வயதில் மகன் உள்ளனர்.ராம்குமார் குடும்பத்துடன் வில்லியனுார் அடுத்த தொண்டமாநத்தம் பாரதி வீதியில் வாடகை வீட்டில் வசிக்கிறார். கடந்த 31ம் தேதி மதியம் ராம்குமார் பூச்சிக் கொல்லி மருந்து குடித்தார். அவரை, அவரது மனைவி காவியரசி மற்றும் உறவினர்கள் மீட்டு ஜிப்மரில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ராம்குமார் நேற்று முன்தினம் இரவு இறந்தார். புகாரின் பேரில் வில்லியனுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை