உள்ளூர் செய்திகள்

தொழிலாளி தற்கொலை

திருக்கனுார்: மனைவி தாய் வீட்டிற்கு சென்றதால் மனமுடைந்த கூலி தொழிலாளி தற்கொலை செய்துகொண்டார்.காட்டேரிக்குப்பம் அமட்டன் குளம் இருளர் குடியிருப்பு பகுதிையை சேர்ந்த ராஜேஷ், 21; கூலி தொழிலாளி. குடிப்பழக்கம் உடைய இவர், வேலைக்கு செல்லாமல், கடந்த சில தினங்களுக்கு முன் தனது மனைவியிடம் குடும்ப செலவிற்கு, நகையை கேட்டதால், இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில், அவரது மனைவி கோபித்து கொண்டு, தனது தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார். இதனால், மனமுடைந்து காணப்பட்ட ராஜேஷ், நேற்று முன்தினம் வீட்டில் துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து காட்டேரிக்குப்பம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை