உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / தொழிலாளி சாவு: போலீஸ் விசாரணை

தொழிலாளி சாவு: போலீஸ் விசாரணை

பாகூர்: குருவிநத்தம் கிராமத்தில் கூலித் தொழிலாளி இறந்து கிடந்தது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.பாகூர் அடுத்த சோரியாங்குப்பம் மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சாந்தமூர்த்தி, 40; இவருக்கு அம்சா என்ற மனைவியும், 10 வயதில் ஒரு மகளும் உள்ளனர். சாந்தமூர்த்திக்கு குடிப்பழக்கம் இருந்தது.நேற்று முன்தினம் காலை, வீட்டிலிருந்து வெளியே சென்றவர் நீண்ட நேரம் ஆகியும் வீடு திரும்பவில்லை. அவரது குடும்பத்தினர் தேடி வந்த நிலையில், குருவிநத்தம் கால்நடை மருத்துவமனை அருகே சாந்தமூர்த்தி இறந்து கிடந்தது தெரியவந்தது.பாகூர் போலீசார், உடலை மீட்டு, புகாரின் பேரில், வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை