உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / மணக்குள விநாயகர் கல்லுாரியில் உலக பொறியாளர்கள் தினம்

மணக்குள விநாயகர் கல்லுாரியில் உலக பொறியாளர்கள் தினம்

புதுச்சேரி: மணக்குள விநாயகர் பொறியியல் கல்லுாரியில், மின்னியல் மற்றும் மின்னணுவியல் துறை மற்றும் உயிரியல் மருத்துவ துறை சார்பில் உலக பொறியாளர்கள் தினம் கொண்டாடப்பட்டது.அதையொட்டி, ஒரு நிலையான உலகத்திற்கான பொறியியல் தீர்வுகள் என்ற தலைப்பில் சுவரொட்டி விளக்கக்காட்சி போட்டி மற்றும் கருத்தரங்கம் நடந்தது. மணக்குள விநாயகர் பொறியியல் கல்லுாரியின் இயக்குனர் வெங்கடாஜலபதி வரவேற்றார். புதுச்சேரி தி இன்ஸ்டிடியூஷன் ஆப் இன்ஜினியர்ஸ் தலைவர் திருஞானம் வாழ்த்தி பேசினார்.அண்ணாமலை பல்கலைகழத்தின் கண்டுபிடிப்பு மற்றும் அடைகாக்கும் ஆராய்ச்சி மையத்தின் தலைமை நிர்வாக அதிகாரி கார்த்திகேயன் சிறப்புரை ஆற்றினார். மாணவர்கள் திறனை வளர்த்துக் கொள்ளுவது குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது. மணக்குள விநாயகர் பொறியியல் கல்லுாரியில் பல்வேறு துறையைச் சேர்ந்த மாணவ மாணவிகள், சுவரொட்டி விளக்கக்காட்சியில் கலந்துகொண்டு பரிசுகளைப் பெற்றனர்.விழாவில் மணக்குள விநாயகர் கல்வி அறக்கட்டளையின் தலைவர் மற்றும் மேலாண் இயக்குனரான தனசேகரன், செயலாளர் நாராயணசாமி கேசவன், பொருளாளர் ராஜராஜன், கல்லுாரி இயக்குனர் வெங்கடாஜலபதி, தேர்வு கட்டுப்பாட்டாளர் ஜெயக்குமார், அகாடெமிக்ஸ் டீன்கள் அன்புமலர், அறிவழகர், டீன் ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு டீன் வேல்முருகன், வேலைவாய்ப்பு டீன் கைலாசம் உட்பட பலர் பரிசு பெற்ற மாணவர்களை பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ