உள்ளூர் செய்திகள்

உலக மண்வள தின விழா

புதுச்சேரி, : புதுச்சேரி வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை சார்பில், உலக மண்வள தின விழா காலப்பட்டு ஜவஹர் நவோதயா வித்யாலயா பள்ளியில் நடந்தது.கூடுதல் வேளாண் இயக்குனர் ஜெய்சங்கர், தலைமை ஆசிரியர் கண்ணதாசன் தலைமை தாங்கினர். வேளாண் அலுவலர் அனுப்குமார் வரவேற்றார்.இணை வேளாண் இயக்குனர்கள் தனசேகரன், சிவசுப்ரமணியன் மத்திய அரசு திட்டம் குறித்து பேசினார். காரைக்கால் நேரு வேளாண் கல்லுாரி பேராசிரியர் சங்கர் மண் வரலாறு, வகைகள், நுண்ணுாட்டச் சத்துக்கள்,மண்வளத்தை மேம்படுத்துதல் குறித்து பேசினார்.மாணவர்களுக்கு மண்வளம் குறித்து வினாடி வினா போட்டி நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது.தொடர்ந்து, காலாப்பட்டு உழவர் உதவியகத்திற்குட்பட்ட விவசாயிகளுக்கு மண்வள அட்டை வழங்கப்பட்டது.ஏற்பாடுகளை தொழில்நுட்ப மேலாளர் ஆதித்தன், களப்பணியாளர் இளங்கோ, ஆசிரியர்கள் ஆஷா, ரபீக் ஆகியோர் செய்திருந்தனர். வேளாண் அலுவலர் தண்டபாணிநன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை