உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / மாட்டு பொங்கலையொட்டி கோவில்களில் வழிபாடு

மாட்டு பொங்கலையொட்டி கோவில்களில் வழிபாடு

திருக்கனுார்: மாட்டு பொங்கலை முன்னிட்டு, மாடுகளை அலங்காரம் செய்து, அப்பகுதி கோவில்களுக்கு அழைத்து சென்று வழிபாடு நடத்துவது வழக்கம். மாட்டு பொங்கலை முன்னிட்டு, திருக்கனுார் மற்றும் அதனை சுற்றியுள்ள செட்டிப்பட்டு, கூனிச்சம்பட்டு, மணலிப்பட்டு, வம்புப்பட்டு உள்ளிட்ட கிராமங்களில் கால்நடை வளர்போர், தங்களது மாடுகளை கழுவி, புதிய கயிறு மற்றும் சலங்கைகளை கட்டி, அலங்காரம் செய்தனர்.மாலை 4:00 மணிக்கு மேல் அலங்காரம் செய்த மாடுகளை அப்பகுதியில் கோவில்களுக்கு அழைத்து, சென்று வழிபாடு நடத்தினர். தொடர்ந்து, கோவில் வளாகத்தில் இருந்து மாடுகள் விரட்டும் நிகழ்ச்சி நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ