மேலும் செய்திகள்
இளம்பெண் குளிப்பதை படம் பிடித்தவருக்கு தர்மஅடி
19-Aug-2025
வில்லியனுார்: சேதராப்பட்டு அருகே தோப்பில் தற்கொலை செய்துகொண்ட இளம் பெண் அடையாளம் தெரிந்தது. சேதராப்பட்டு அடுத்த கரசூர் ரோடியோ நிலையம் எதிரேஅடர்ந்த தோப்பில் கடந்த 26ம் தேதி காலைஇளம்பெண் ஒருவர் துாக்கில் பிணமாக தொங்கினார். இதை பார்த்தவர்கள் சேதராப்பட்டு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு சென்ற சப்-இன்ஸ்பெக்டர் ராஜேஷ் தலைமையிலான போலீசார் அழுகிய நிலையில் முகம் சிதைந்த இளம் பெண் உடலை மீட்டு, கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து கரசூர் வி.ஏ.ஒ., அளித்த புகாரின் பேரில், வழக்குப் பதிந்து இறந்த பெண் யார் என, விசாரித்து வந்தனர். இந்நிலையில இறந்த பெண் வில்லியனுார் அடுத்த உத்தரவாகினி பேட்டைசேர்ந்த ஜெயசுதா, 30, என தெரியவந்தது. கடந்த நான்கு வருடத்திற்கு முன், அவருக்கு திருமணம் நடந்துள்ளது.ஒரு சில மாதங்களில் கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்து பெற்றோர் வீட்டுக்கு சென்றுவிட்டார். பின், கரையாம்பேட் பகுதியைச் சேர்ந்த ஏற்கனவே திருமணம் ஆன மணிகண்டன் என்பவருடன் ஜெயசுதாவுக்கு பழக்கம் ஏற்பட்டது. இரண்டு வருடத்திற்குமுன், அவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்ட அவர்கள், உளவாய்க்கால் பகுதியில் வீடு வாடகைக்கு எடுத்து குடும்பம் நடந்திவந்தனர். இவர்களுக்கு ஒன்றரை வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது.தற்போது வசிக்கும் வாடகை வீட்டை காலி செய்து வேறு இடத்திற்கு செல்லலாம் என, ஜெயசுதா, மணிகண்டனிடம் கூறியுள்ளார். அப்போது இருவருக்கும் பிரச்னை ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்த ஜெயசுதா கடந்த 24ம் தேதி காலை குழந்தையை மணிகண்டனிடம் விட்டுவிட்டு வீட்டை விட்டு வெளியே சென்றார்.அவர், தாய் வீட்டிற்கு சென்றிருப்பார் என நினைத்து, மணிகண்டன்அவரை தேடவில்லை. இதனிடையே வாட்ஸ் ஆப்பில் இளம்பெண் தற்கொலை படம் வந்ததை பார்த்து மணிகண்டன் அதிர்ச்சியடைந்து,ஜெயசுதா வீட்டிற்கு சென்று பார்த்தார். அவர் அங்கு இல்லாததால், இறந்தது உறுதி செய்யப்பட்டது. பின், ஜெயசுதாவின் பெற்றோரை அழைத்து சென்று, நேற்று முன்தினம் இரவு சேதராப்பட்டு போலீசாரிடம் புகார் அளித்தனர். இளம் பெண் தற்கொலை குறித்து உழவர்கரைதுணை தாசில்தார் முனியம்மாள் நேற்று விசாரணைசெய்தார்.
19-Aug-2025