உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  ரகளை செய்த வாலிபர் கைது

 ரகளை செய்த வாலிபர் கைது

பாகூர்: பொது இடத்தில் ரகளையில் ஈடுபட்ட வாலிபரை போலீசார் கைது செய்தனர். பாகூர்போலீஸ் சிறப்பு நிலை ஏட்டு சக்திவேல்முருகன் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் இரவு ரோந்து சென்றனர். சோரியாங்குப்பம் தென்பெண்ணையாறு மேம்பாலம் அருகே வாலிபர் ஒருவர் குடி போதையில், பொதுமக்களை ஆபாசமாக திட்டி, ரகளையில் ஈடுபட்டார். விசாரணையில், அவர், கடலுார்ல பாதிரிக்குப்பத்தை சேர்ந்த பிரவின்ராஜ் 28; என்பது தெரியவந்தது. இதையடுத்து, அவரை கைது செய்த போலீசார், வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி