வாலிபருக்கு கத்திகுத்து மூன்று பேருக்கு வலை
காரைக்கால்: நாகப்பட்டினம் ஏர்வாடி கிடாமங்கலம் மெயின்ரோடு பகுதியை சேர்ந்த பாஸ்கர் மகன் சிவசங்கர், 29; எலக்ட்ரிஷியன். இவரது தாய் சகுந்தலா காரைக் கால் விழிதியூர் மாரியம்மன் கோவில் அருகில் உள்ள கடையில் வேலை செய்து வருகிறார். நேற்று முன்தினம் சகுந்தலா கடைக்கு சிவசங்கர் வந்துள்ளார். அப்போது முன்விரோத காரணமாக அதே பகுதியைச் சேர்ந்த கார்த்தி, நந்தகோபால்,நேதாஜி ஆகிய மூவரும் சிவசங்கரை வழிமறித்து தாக்கினர். தடுக்க வந்த சகுந்தலாவை கத்தியால் குத்திவிட்டு தப்பினர். இதில் படுகாயமடைந்த சங்கரை அருகில் இருந்தவர்கள் மீட்டு அரசு மருந்துவனையில் சேர்த்தனர். புகாரின் பேரில் நிரவி போலீசார் கார்த்திக் உட்பட மூவர் மீது 5 பிரிவுகளில் வழக்குப் பதிவுசெய்து தேடி வருகின்றனர்.