உள்ளூர் செய்திகள்

வாலிபர் தற்கொலை

பாகூர் : கிருமாம்பாக்கம் அடுத்த பிள்ளையார்குப்பம் பேட் பகுதியை சேர்ந்தவர் ரவிராஜன் 37; இவருக்கு சாலை விபத்தில் வலது கை அடிப்பட்டு செயலிழந்தது. திருமணம் செய்து கொள்ளாமல், அதே பகுதியை சேரந்த ஒரு பெண்னுடன் வாழ்ந்து வந்தார். மது பழக்கத்திற்கு ஆளான ரவிராஜன், சரிவர வேலைக்கு செல்லாமல் இருந்து வந்தார். விரக்தியில் இருந்து வந்த ரவிராஜன் கடந்த 24ம் தேதி இரவு குடிபோதையில் வீட்டிற்கு வந்தார். மறுநாள் காலை பார்த்த போது, ரவிராஜன் மின் விசிறியில் துாக்கில் தொங்கினார். கதிர்காமம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி இறந்தார். கிருமாம்பாக்கம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !