உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / பாட்மின்டன் / இந்தியாவுக்கு 24 பதக்கம்: ஜப்பான் பாரா பாட்மின்டனில்

இந்தியாவுக்கு 24 பதக்கம்: ஜப்பான் பாரா பாட்மின்டனில்

டோக்கியோ: ஜப்பான் பாரா பாட்மின்டனில் இந்தியாவுக்கு 6 தங்கம் உட்பட 24 பதக்கம் கிடைத்தது.ஜப்பான் தலைநகர் டோக்கியோவில், மாற்றுத்திறனாளிகளுக்கான சர்வதேச பாரா பாட்மின்டன் தொடர் நடந்தது. பெண்கள் ஒற்றையர் (எஸ்.யு. 5) பைனலில் இந்தியாவின் மணிஷா ராமதாஸ், ஜப்பானின் மாமிகோ டெயோடா மோதினர். அபாரமாக ஆடிய மணிஷா 21-12, 12-18 என்ற கணக்கில் வெற்றி பெற்று தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றார்.ஆண்கள் ஒற்றையர் (எஸ்.எல். 4) பைனலில் இந்தியாவின் சுகந்த் கடம், தருண் மோதினர். இதில் சுகந்த் கடம் 21-12, 21-10 என வெற்றி பெற்று தங்கம் வென்றார்.ஆண்கள் ஒற்றையர் (எஸ்.எச். 6) பைனலில் இந்தியாவின் சிவராஜன் சோலமலை 21-16, 21-16 என ஹாங்காங்கின் சுன் யிம் வோங்கை வீழ்த்தி தங்கத்தை கைப்பற்றினார்.ஆண்கள் இரட்டையர் பிரிவு பைனலில் இந்தியாவின் உமேஷ் விக்ரம் குமார், சூர்ய காந்த் யாதவ் ஜோடி 21-5, 20-22, 21-16 என சகநாட்டை சேர்ந்த சுகந்த் கடம், தினேஷ் ராஜய்யா ஜோடியை வீழ்த்தி தங்கம் வென்றது.இத்தொடரில் 6 தங்கம், 9 வெள்ளி, 9 வெண்கலம் என, மொத்தம் 24 பதக்கம் வென்றது இந்தியா.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !