உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / பாட்மின்டன் / இஷாராணி கலக்கல் * இலங்கை பாட்மின்டனில்...

இஷாராணி கலக்கல் * இலங்கை பாட்மின்டனில்...

காலே: இலங்கை பாட்மின்டனில் இந்தியாவின் இஷா ராணி சாம்பியன் ஆனார்.இலங்கையின் காலேயில் சர்வதேச பாட்மின்டன் சாம்பியன்ஷிப் தொடர் நடந்தது. பெண்கள் ஒற்றையர் பிரிவு பைனலில் இந்தியாவின் இஷாராணி பருவா 20, 16 வயது வீராங்கனை ரக்சிதா ராம்ராஜ் மோதினர். முதல் செட் ரக்சிதா சவால் கொடுத்த போதும், இஷாராணி 22-20 என கைப்பற்றினார்.தொடர்ந்து அசத்திய இவர், அடுத்த செட்டையும் 21-14 என வசப்படுத்தினார். முடிவில் இஷாராணி 22-20, 21-14 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்று தங்கம் கைப்பற்றினார்.* ஆண்கள் ஒற்றையரில் இந்தியாவின் குல்ஷன் குமார், சக வீரர் சதிஷ் குமாரை சந்தித்தார். இதில் குல்ஷன் குமார் 21-18, 21-17 என வென்று தங்கம் வசப்படுத்தினார்.* கலப்பு இரட்டையர் பைனலில் இந்தியாவின் ஆஷித் சூர்யா, அம்ருதா ஜோடி, 21-15, 21-13 என தாய்லாந்து ஜோடியை வென்று சாம்பியன் ஆனது.* பெண்கள் இரட்டையரில் உலகத் தரவரிசையில் 53வது இடத்திலுள்ள இந்தியாவின் ருதுபர்ணா, ஸ்வேதாபர்ணா சகோதரிகள் 12-21, 14-21 என 'நம்பர் 181' வது இடத்திலுள்ள தாய்லாந்து ஜோடியிடம் அதிர்ச்சி தோல்வியடைந்தது, வெள்ளி வென்றது.இத்தொடரில் இந்தியா 3 தங்கம், 3 வெள்ளி, 3 வெண்கலம் என மொத்தம் 9 பதக்கம் கைப்பற்றியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி